பிரபல தமிழ் எழுத்தாளர் காலமானார்

  • பிரபல தமிழ் எழுத்தாளர் டி.செல்வராஜ் காலமானார்
  • சாகித்ய அகடாமி விருதுகளை பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தமிழ் மூத்த எழுத்தாளர் டி.செல்வராஜ் (81) திண்டுக்கலில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை காலமானார்.

திருநெல்வேலியை சேர்ந்தவர் டி.செல்வராஜ் ஆரம்பத்தில் வழக்கறிஞராக பணியற்றி உள்ளார்.மேலும் உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கறிஞராக பணியற்றினார். இவர் தமிழ் மீது கொண்டகாதலால் நாவல்கள் சிறுகதைகளை எழுதி அதில் விருதுகளையும் பெற்றுள்ளார்.

Image result for டி.செல்வராஜ்

இவர் எழுதிய நாவலான தேநீர் இயக்குநர் ஜெயபாரதி மற்றும் கே.பாக்கியராஜால் ஊமை ஜனங்கள் என்ற திரைப்படமாக வெளிவந்தது.இவருடைய தோல் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருதினை பெற்றார்.மேலும் இவர் எழுதிய  மூலதனம், மலரும்  சருகும்,அக்னி குண்டம் சிறந்த நாவல்களாகும்.ஏராளமான சிறுகதைகளையும்,நாடகங்களையும் எழுதி உள்ளார்.தமிழக அரசின் சிறந்த எழுத்தாளர் என்ற விருதினை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
kavitha