தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் -ராமதாஸ் ..!

பாமக சார்பில் 20-வது பொது நிழல் நிதி நிலை அறிக்கையை வெளியிட்ட பின்னர்  பேட்டியளித்த பாமக நிறுவனர் ராமதாஸ்,  தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் தான் பெயர் சூட்ட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலிவுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டத்தை பாமக நடத்தும். தமிழ்நாடு முழுவதும் ஏழைக் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள் பயணிக்க தமிழ்நாட்டில் தனி இலவச பேருந்து இயக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டை 60 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும். ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டபேரவை கூட்டத்தை நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு 80% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பேருந்துகளில் அனைவருக்கும் இலவச அனுமதி தேவை என தெரிவித்தார். ஐஐடிக்கு நிகராக தமிழ்நாட்டில் 5 இடங்களில் தொழில்நுட்ப கல்வி நிறுவங்களை தொடங்க வேண்டும் என கூறினார்.

 

 

author avatar
murugan