#TNTET: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு – வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I & II 2022 ம் ஆண்டிற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் http://trb.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 பிற்பகல் 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. ஆசிரியர் பணியில் சேர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.

அந்தவகையில் 2022 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்Paper-I and Paper-II ஆகிய தாள்களுக்கு, தனித்தனி விண்ணப்பங்கள் உள்ளன என்று அறியவுறுத்தப்பட்டுள்ளது. முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf என்ற லிங்கில் தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

தேர்வில் பங்கேற்ப்போருக்கு உரிய விண்ணப்ப கட்டணம் ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் ரூ,250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கால அவகாசத்தை 7ஆண்டுகளிலிருந்து வாழ்நாள் முழுவதும் மத்திய அரசு நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்