தெற்காசியாவிலேயே தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலம் தமிழ்நாடு – முதலமைச்சர்

ஆங்கில நாளேடு கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு மெர்ச்சன்ட்ஸ் ஆப் மெட்ராஸ் வணிக பிரதியை வெளியிட்டார்.

சென்னையில் ட்ரில்லியன் டாலர் தமிழ்நாடு கருத்தரங்கில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் ‘மெர்ச்சன்ட்ஸ் ஆப் மெட்ராஸ்‘ என்ற வணிக பிரதியை வெளியிட்டார். இதன்பின் பேசிய முதல்வர், தெற்காசியாவிலேயே தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலம் தமிழ்நாடு.

புதிய தொழில்களை தொடங்குவதற்கான உள்கட்டமைப்பை சீர்செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து மாவட்டங்களையும், அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே தமிழக அரசின் நோக்கம் என்றும் திமுக அரசின் 4 மாத ஆட்சி காலத்தில் தொழில்துறை புத்துணர்ச்சி அடைந்து உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், நாட்டிலேயே மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றும், இதை முதலிடத்திற்கு கொண்டுவர தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்