தமிழக அரசு ரூ.5,137 கோடியில் 16 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழக அரசு ரூ.5,137 கோடியில் 16 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் படி, பல புதிய நிறுவனங்களுடன், தொழில்துறைகள் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு வருகிற நிலையில், ரூ.5,137 கோடி முதலீட்டில், சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெறும் வகையில், 16 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களில் 6 திட்டங்களுக்கு நேரடியாகவும், 10 திட்டங்களுக்கு காணொளி மூலமாகவும் கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும், கடந்த நான்கு மாதத்தில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்களுக்காக ரூ.30,644 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.