தமிழ் வேகமாக செத்து வருகின்றது! – பாமக நிறுவனர் ராமதாஸ்

தொலைபேசி எடுத்தால் வணக்கம் என்று சொல்லுங்கள். ஹலோ என்று அழைக்காதீர்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள். 

தமிழைத் தேடி விழிப்புணர்வு பயணத்தின் ஒரு பகுதியாக  கடலூரில் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் மற்ற மொழியை கலக்காதீர்கள்

அப்போது பேசிய அவர், தமிழ் மெல்ல மெல்ல சாகவில்லை. வேகமாக செத்து வருகிறது. எந்த மொழியை வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால் தமிழில் மற்ற மொழியை கலக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் எங்கே உள்ளது என்று தெரிவித்தால் எனது தலையை அடமானம் வைத்து ரூ.5 கோடி தருவேன். கருப்புமையை எடுத்துக்கொண்டு தமிழ் மொழி தவிர வேறு மொழி எங்கு உள்ளது அதனை எல்லாம் அழியுங்கள். தொலைபேசி எடுத்தால் வணக்கம் என்று சொல்லுங்கள். ஹலோ என்று அழைக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment