தாலி, மெட்டியை அகற்றும்படி கூறுவது சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி வழக்கு..!

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றனர். பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மாணவிகள் கம்மல், ஜிமிக்கி, மூக்குத்தி, வளையல், மோதிரம்,  போன்ற எதுவும் அணியக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் போது, திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆன பெண் ஒருவர் தேர்வு எழுத வந்துள்ளார். அப்போது, அவரின் தாலி, மெட்டியை அகற்றும்படி வற்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அரவிந்த் ராஜ் என்பவர் பொதுநல வழக்கு ஓன்று தாக்கல் செய்துள்ளார். அதில்,  திருமணம் ஆனா பெண்கள் புனிதமாக கருதப்படும்  தாலி, மெட்டியை அகற்றும்படி நீட் தேர்வின் போது வற்புறுத்தியாக  கூறினர்.

மேலும், இதுபோன்ற செயல்களால் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதனால், இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.

author avatar
murugan