தைவான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

Taiwan Earthquake: தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வந்துள்ளது.

தைவானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது மற்றும் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 143 க்கும் மேற்பட்ட நபர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தீவு நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் (CNA) தெரிவித்துள்ளது.

இதுவரை கிடைத்த தரவுகளின்படி, உயிரிழந்த ஒன்பது பேரில் ஐந்து பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் அடங்குவர். தைவான் தலைநகர் தைபேயில் நேற்று அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தைவான் மத்திய வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மட்டும் இல்லாமல், திடீரென நிலநடுக்கம் ஏற்பட்தால் அந்நகரத்தின் கட்டிடங்கள் சில சரிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் வைரலானது.

தற்போது, முன்னெச்சரிக்கையாக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், தெற்கு ஜப்பானிய தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.