குருவிக்காரர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

எஸ்டி பட்டியலில் குருவிக்காரர், நரிக்குறவர் பிரிவினரை சேர்க்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. குருவிக்காரர், நரிக்குறவர் சமுதாயத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கும் மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கடந்த 15-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. எனவே நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறிய குருவிக்காரர், நரிக்குறவர் மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று சட்டமாகிய பின்னர் தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

#BREAKING: குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து – மசோதா நிறைவேற்றம்!

குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.  குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அரசியல் வித்தியாசங்களை கடந்து பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். மக்களவை ஒப்புதலை தொடர்ந்து மாநிலங்களவை பரிசீலனைக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும் மசோதா ஒப்புதல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று 2023ம் ஆண்டு இந்த மசோதா சட்டமாகி அமலுக்கு வந்து, தமிழகத்தில் குருவிக்காரர் சமுதாயத்துக்கு … Read more