ஆன்லைன் வகுப்பால் நடந்த விபரீதம்.! தற்கொலை செய்து கொண்ட மாணவன்.!

ஆன்லைன் வகுப்பில் எடுக்கும் பாடங்கள் புரியாததால் படிக்காமல் இருந்த 10ம் வகுப்பு மாணவனை ஆசிரியரும், பெற்றோரும் திட்டியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தேனியில் ஆண்டிப்பட்டியில் வசித்து வரும் பாண்டியன் என்பவரது மகன் அபிஷேக். இவர் திண்டுக்கல் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் . … Read more

ஆன்லைன் வகுப்பு.. தமிழக அரசின் வழிமுறைகளை பின்பற்ற உத்தரவு.!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து,  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால்,  தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரி  சென்னை உய்ரநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்தபோது, ஆன்லைன் கல்வி தொடர்பாக தமிழக அரசின் வழிமுறைகளை அனைத்து பள்ளிகளும் பின்பற்றும் என … Read more

BREAKING: தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க மறுப்பு.!

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.  அந்த வழக்கில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் விற்பனை தடை செய்யவும், ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால் … Read more

1 முதல் 5-ம் வகுப்பு வரை கர்நாடகாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை!

கர்நாடகாவில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை.  கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளும், மூடப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் 2020-2021-ம் ஆண்டுக்கான பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவிலும் இந்த வகுப்புகள் நடைபெற்று வருகிற நிலையில், சிறுவர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள் முன்பாக அதிக நேரம் அமர்ந்திருப்பது, அவர்களுக்கு உடல் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படும் என குற்றசாட்டுகள் எழுந்தது.  இதனையடுத்து பெங்களூரில் உள்ள மனநல மற்றும் … Read more

#BREAKING: ஆன்லைன் வகுப்புகள் தடைவிதிக்க -உயர்நீதிமன்றம் மறுப்பு.!

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை விதிக்க கோரி சரண்யா தொடர்ந்த வழக்கை ஜூன் 20-ம் தேதிக்கு  சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.  கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகள்திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலன்கருதி பல பள்ளி நிர்வாகம், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகள் வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்றும், ஏழை மாணவர்களுக்கு சாத்தியம் இல்லை என பலர்  கூறி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் … Read more

ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள இயலவில்லை! உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி!

ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள இயலாத காரணத்தால், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி தேவிகா.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரசின் தீவிர பரவலால், இந்தியா முழுவதும் பள்ளிகள்,  கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.  இந்நிலையில், கேரளா மாநிலத்தில், கடந்த திங்கட்கிழமை பர்ஸ்ட் பெல் என்ற ஆன்லைன் வகுப்பறை திட்டத்தின் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் … Read more