99.90 அடியாக அதிகரித்த மேட்டூர் அணை நீர்வரத்து – வினாடிக்கு 27.21 ஆயிரமாக அதிகரிப்பு!

99.90 அடியாக அதிகரித்த மேட்டூர் அணை நீர்வரத்த, வினாடிக்கு 27.21 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் அதிகமாக பலத்த மழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. 99.11 அடியாக நேற்று காலை வரை இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 99.90 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், அணை நிரம்ப கூடிய அபாயம் ஏற்படும் என்பதால் கிழக்கு … Read more

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் : அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 98.50 அடியாக உயர்ந்துள்ளது இந்நிலை, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால்  நேற்று காலை 98.03 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 98.50 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு … Read more

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு.!

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேட்டூர் அணையிலிருந்து வரும் 18 ஆம் தேதி முதல் புள்ளம்பாடி, புதிய கட்டளைமேட்டு கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். வரும் 18 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரை, அதாவது 136 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தண்ணீர் திறப்பின் மூலம் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன … Read more

மேட்டூர் அணை நீர்மட்டம் 26½ அடி ஆக குறைந்தது.!

மேட்டூர் அணை நீர்மட்டம் : 72.420 அடி நீர்இருப்பு : 34.815 டி.எம்.சி. நீர்வரத்துவினாடிக்கு 201 கன அடியாக உள்ளது நீர் வெளியேற்றம் காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி … Read more

11 ஆண்டுகளுக்குப் பிறகு குறித்த தேதியில் மேட்டூா் அணை திறப்பு

கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் குறித்த தேதியில் காவேரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. மேட்டூா் அணைப்பாசனம் மூலம் 12  மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கா் நிலங்கள் பயன்பெறுகிறது. மேட்டூா் அணையில் இருந்து வருடந்தோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை பாசனத்துக்கு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை 15 முறை மட்டுமே குறித்த தேதியான ஜூன் 12-ம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. மற்ற வருடங்களில் … Read more

12 மாவட்டங்களுக்கு தொடரும் வெள்ள அபாயம்..!!120 அடியிலேயே நீடிக்கும் மேட்டூர் அணை..!!!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1.33 லட்சம் கனஅடியில் இருந்து 1.14 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் 1.13 லட்சம் கனஅடியில் இருந்து 1.11 லட்சம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120.30 அடியாகவே இருந்து வருகிறது. கொள்ளிடம் ஆற்றிலிருந்து 79,300 கனஅடியும், திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து 40,107 கனஅடியும் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்படுவதால் சேலம், கடலூர், திருவாரூர், தஞ்சை, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, … Read more

மேட்டூர் அணையின் கூடுதல் உபரிநீரால் போக்குவரத்து கடும்பாதிப்பு..!!

மேட்டூர் அணையில் கூடுதல் உபரிநீர் வெளியேற்றத்தால், காவிரி கரையில் உள்ள சங்கிலி முனியப்பன் கோவில், பொறையூர், ரெட்டியூர், கோலநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளதால், அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். காவிரிக் கரையோரம் அமைந்துள்ள சாலைகளையும் தண்ணீர் ஆக்கிரமித்துள்ளது. இதனால் தெற்கித்திகாடு, பூலாம்பட்டி ஆகிய ஊர்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பொதுமக்கள் யாரும் சாலையை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேட்டூர் அணையில் 1.30 லட்சம் நீர் திறப்பால் 45க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் முழ்கியது…!!

மேட்டூர் அணையில் 1.30 லட்சம்  நீர் திறப்பால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதனிடையே நேற்று முதல் மேட்டூர் அணையில் கூடுதலான நீர் திறந்து விடப்படுவதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 45க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் முழ்கியது. மக்கள் அனைவரும் நிவராண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேட்டூர் அணை ஒரே மாதத்தில் இருமுறை தனது முழுகொள்ளவை  எட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு  DINASUVADU_டன் இணைந்திருங்கள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 134 கனஅடியிலிருந்து 215 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 134 கனஅடியிலிருந்து 215 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.53 அடியாகவும்,இதனால் அணையின் மொத்த நீர் இருப்பு 31.45 டிஎம்சியாகும்.அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அளவானது சுமார் 7,000 கனஅடியாக உள்ளது.அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…

  கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 128 கன அடியிலிருந்து 149 கன அடியாக அதிகரித்துள்ளது.இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 71.70 அடியாகவும் உள்ளது.அணையின் மொத்த நீர் இருப்பு 34.17 டிஎம்சி, வெளியேற்றம் 7,000 கன அடியாகவும் உள்ளது.