#BREAKING: ஒரே இரவில் ஆப்கானிஸ்தானில் உள்ள முக்கிய விமான நிலையத்தை தாக்கிய 3 ராக்கெட்கள்.!

ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் விமான நிலையத்தை 3 ராக்கெட்டுகள் தாக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ஆப்கானிஸ்தானின் கந்தஹார் விமான நிலையத்தில் மூன்று ராக்கெட்டுகள் தாக்கியதாகவும், இதனால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும், விமான நிலைய தலைவர் மசூத் பஷ்டூன் தெரிவித்துள்ளார். அதாவது, நேற்று இரவு விமான நிலையத்தில் மூன்று ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் 2 ராக்கெட்டுகள் ரன்வேயை தாக்கியுள்ளது என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக, விமான நிலையத்தில் இருந்து அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. … Read more