காவலரை காஞ்சிபுரம் கலெக்டர் ஒருமையில் திட்டிய விவகாரம்! தானாக முன்வந்து விசாரிக்கும் மனித உரிமை ஆணையம்!

சில நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் அத்திவரதர் ஆலயத்தில் பொதுமக்கள் சிலரை கூட்ட நெரிசல் காரணமாக விஐபி  தரிசன வரிசையில் செல்ல அனுமதித்தாக கூறி  காஞ்சிபுரம் காவல் ஆய்வாளரை ஒருமையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திட்டினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பேசுபொருளாகவும், செய்தியாகவும் மாறியது. இந்த செய்திகளை பார்த்துவிட்டு, மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என தலைமை செயலாளர், டிஜிபி  ஆகியோரிடம் … Read more

காவலரை ஒருமையில் திட்டிய காஞ்சிபுரம் கலெக்டருக்கு பதிலடி கொடுக்க வெளியான புதிய வைரல் வீடியோ!

காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூட்டநெரிசல் காரணமாக பொதுமக்கள் சிலரை விஐபி தரிசன வரிசையில் அனுமதித்ததாக கூறப்படுகிறது.  இது தெரிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் மெத்தனப்போக்கு இருப்பதாக அந்த காவலரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஒருமையில் திட்டிய வீடியோ வைரலாக பரவியது. காவல் ஆய்வாளரை திட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது குடும்பத்தினரை, பாஸ் இல்லாமல், தனது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி விவிஐபி நுழைவு வாயில் வழியாக அழைத்துச் செல்லும் காட்சியை போலீசார் … Read more

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம்! கூட்டநெரிசலில் சிக்கிய 33க்கும் அதிகமானோருக்கு தீவிர சிகிச்சை!

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க தினம் தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. 1 மணி வரை சுமார் 1.30 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துவிட்டு சென்றுள்ளனர். தற்போது வரை 33 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்வது கூட அந்த கூட்டத்தில் தாமதமாக இருக்கிறது. இந்த பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, மாவட்ட … Read more

அத்திவரதரை காண குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்! தினமும் 3 லாரிகள் அளவிற்கு குப்பைக்கு செல்லும் காலணிகள்!

காஞ்சிபுரம் அத்திவரதரை காண நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து விட்டு செல்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், மாவட்ட நிர்வாகம், பக்தர்களை கிழக்கு வாசல் வழியாக உள்ளே அனுப்பி, மேற்கு வாசல் வழியாக வெளியே அனுப்பும்படி பாதை வடிவமைத்து உள்ளனர். பக்தர்கள் கிழக்கு வாசல் வழியாக உள்ளே செல்கையில் காலணிகளை அங்கேயே கழட்டி விட்டு சென்று விடுகின்றனர். கிழக்கு வாசலுக்கும் மேற்கு வாசலுக்கும் இடையே சுமார் ஒன்றரை கிமீ இருப்பதாலும், வெகு நேரம் காத்திருந்து தரிசனம் … Read more