இந்த நகரங்கள்தான் குப்பை இல்லா நகரங்கள்.! இதற்கு 5-ஸ்டார் வழங்கிய அமைச்சர்.!

குப்பை இல்லா நகரங்களாக அறிவிக்கப்பட்ட ஐந்து நகரங்களுக்கும் 5-ஸ்டார் வழங்கப்படும் என்று அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 

நாட்டில் சத்தீஸ்கரில் அம்பிகாபூர், குஜராத்தில் ராஜ்கோட், கர்நாடகாவில் மைசூர், மத்திய பிரதேசத்தில் இந்தூர் மற்றும் மகாராஷ்டிராவில் நவி மும்பை ஆகிய ஐந்தும் நகரங்களும் குப்பை இல்லாத நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குப்பை இல்லா நகரங்களாக அறிவிக்கப்பட்ட இந்த ஐந்து நகரங்களுக்கும் 5-ஸ்டார் வழங்கப்படும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.