தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் 46 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்: தமிழக அரசு

டெங்கு குறித்த வழக்கானது உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று விசாரனைக்கு வந்தது.அப்போது நடந்த விசாரணையில் தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் 46 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர் என அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் அளிக்கப்பட்டது. டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்குவது குறித்து, அரசு தரப்பில் கூடுதல் பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.பின்னர் வழக்கு விசாரணையை ஜனவரி 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

மாதம் 7000 : இது டெங்கு கணக்கு

தமிழகத்தில் மட்டுமே டெங்குவால் மாதம் 7000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆண்டு இல்லாத வகையில் இந்தாண்டு இவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் இதுவரை 1.40லட்சம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 216 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் டெங்குவால் தமிழகத்தில் 20141பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்  52 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வேலூரில் 2 கம்பெனிகளுக்கு 15 ஆயிரம் அபராதம்

வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் நடந்த சோதனையில்  டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் அசுத்தமாக இருந்தது. இதனால் அந்த கம்பெனிக்கு ரூ.5000 அபராதமும், இதேபோல் அதேபகுதியில்  ஒரு லெதர் கம்பெனியிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் பொருட்கள் இருந்ததால் அந்த  கம்பெனிக்கு ₹10 ஆயிரம் அபராதம்  விதித்தனர்  இச்சம்பவம், பயிற்சி கலெக்டர் ஸ்ரீகாந்த், தாசில்தார் பாலாஜி தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் டெங்கு தடுப்பு ஆய்வு மேற்கொண்டபோது நடைபெற்றது.