சிறையில் கைதிகளுக்கு கஞ்சா எடுத்து வந்த சிறைக்காவலர் சஸ்பெண்ட்..!

கோவை மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட 7 செல்போன்கள்,  சிம்கார்டுகள் மற்றும்  சார்ஜர் ஆகியவை சிறை  கைதிகள் இருக்கும் சிறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு வேலை செய்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிறைக்கைதிகளுக்கு கொடுப்பதற்காக சிறைக்கு எடுத்து வந்ததது அங்கு நடத்திய சோதனையில் தெரிந்தது. இதை தொடர்ந்து சிறைக் கண்காணிப்பாளர்  கிருஷ்ணமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து  உத்தரவிட்டுள்ளார்.

கஞ்சா வியாபாரி வெறிச்செயல் பொதுமக்கள் மீது அரிவாள் வெட்டு: ஒருவர் பலி!

 காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் என்ற இடத்தில் கஞ்சா வியாபாரி புருஷோத்தமன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கஞ்சா போதையில் சாலையில் செல்பவர்கள் மீது பட்டா கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில்  தனஞ்செழியன் என்பவர் சம்பவ இடத்திலேயே  இறந்தார். மேலும் 6 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டு உள்ளனர்.