போனி கபூர் வீட்டு பணியாளருக்கு கொரோனா தொற்று….

ஹிந்தி திரை உலகின் முன்னணி தயாரிப்பாளரான போனி கபூரின் வீட்டு பணியளருக்கு கொரோனா தொற்று.

ஹிந்தி திரை உலகின் பிரபல தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் வீட்டில் வேலை செய்யும் பணியாரன 23 வயதான சரன் சாஹூ என்பவருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொற்று போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் உள்ளிட்ட அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. 

இந்நிலையில் இது குறித்து போனி கபூர் கூறியதாவது, நானும் எனது குடும்பத்தினரும் நலனுடன் இருக்கிறோம்.  எங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. நாங்கள் எங்களுக்கு நாங்களே வீட்டில் தனிமை படுத்தியுள்ளோம். மருத்துவர்கைன் அலோசனையை பின்பற்றி வருகிறோம். எங்களுக்கு உதவிய மகாராஷ்டிரா அரசுக்கும் மும்பை மாநகராட்சிக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.