பீட்சா டெலிவரி செய்யலாம்..ரேஷன் பொருள் டெலிவரி செய்யக்கூடாதா?- கெஜ்ரிவால்..!

டெல்லியில் வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இந்த திட்டம் அமல்ப்படுத்த 2 நாட்கள் உள்ள நிலையில் மத்திய அரசு திட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் அரவிந்த் கெஜ்ரிவால் வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை அறிவித்தார். ஆனால், இத்திட்டத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி பெறாததாலும், நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடைபெறுவதாலும் இதற்கு அனுமதி தர டெல்லி துணை நிலை ஆளுநர் … Read more

கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் – டெல்லி முதல்வர்!

கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள டெல்லி தயாராக உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் 19,420 டன் ஆக்சிஜன் சேமிப்பு மையங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். கடந்த சில வாரங்களாக டெல்லியில் கொரோனா வைரஸின் தீவிரம் குறைய தொடங்கியுள்ளது. இதனையடுத்து டெல்லியில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு தற்பொழுது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற திங்கட்கிழமை முதல் மெட்ரோ ரயில் 50 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், சந்தைகள் … Read more

Breaking: டெல்லியில் மேலும் ஒரு வாரம் பொது முடக்கம் நீட்டிப்பு..!

டெல்லியில் மேலும் ஒரு வாரம் பொது முடக்கம் நீட்டித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருக்கிறார். டெல்லியில் மேலும் ஒரு வாரம் பொது முடக்கம் விதிக்கப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஏற்கனவே விதிக்கப்பட்ட ஊரடங்கு  நாளையுடன் முடியவிருந்த நிலையில், வரும் 24ஆம் தேதி காலை 5 மணி வரை அந்த முழுக் ஊடகத்தை நீட்டித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வரை தலைநகர் டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் அதிகமாக இருந்தது. பாதிக்கப்படுபவர்கள் … Read more

#BREAKING: டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு..!

டெல்லியில் மே 10-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கும் என அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2-வது அலை காரணமாக டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 19-ஆம் தேதி நள்ளிரவு முதல் 26-ஆம் தேதி  அதிகாலை 5 மணிவரை ஒரு வார காலம் முழு … Read more

BREAKING: டெல்லியில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம்- கெஜ்ரிவால் அறிவிப்பு ..!

அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக தற்போது பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை இது போன்ற பல புகார்கள் எழுந்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், கொரோனாவை கட்டுப்படுத்த மே 1 முதல் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி என சமீபத்தில் மத்திய … Read more

#BREAKING: டெல்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு – கெஜ்ரிவால் அறிவிப்பு..!

டெல்லியில் நாளை முதல் மே 3 ஆம் தேதி காலை 5 மணி வரை  மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு. இந்தியாவில் கொரோனா 2-வது அலை காரணமாக டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த வாரம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நாளை அதிகாலை 5 மணிவரை ஒரு … Read more

#Breaking: மனைவிக்கு கொரோனா.. தனிமைப்படுத்திக் கொண்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

தனது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். டெல்லியில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 23,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அம்மாநிலத்தில் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் இரண்டாம் அலையில் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என்று பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், டெல்லி … Read more

சுகாதாரத்துறை பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது -டெல்லி முதல்வர்!

கொரோனாவின் பாதிப்பு டெல்லியில் நாளுக்கு நாள் டெல்லியில் அதிகரித்துக் கொண்டே வருவதால் மாநில சுகாதாரத்துறை பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தனது வீரியத்தை அதிகரித்துள்ள நிலையில், தற்போது இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசுகளும் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. கடந்த … Read more

#Breaking: “ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை”- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அம்மாநிலத்தில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், டெல்லியில் கொரோனா பேரால் தொடர்பாக … Read more

சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்..!

சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதால் பெற்றோர்கள் மத்தியில் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படலாம் என கூறுகின்றனர். இந்நிலையில், டெல்லியில் 6 லட்சம் மாணவ-மாணவிகள் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுத உள்ளனர். … Read more