ரஷ்ய உளவுத்துறையின் மீதான சந்தேகத்தைப் போக்கிய செய்தியாளர் ..!

உக்ரைனில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட ரஷ்யச் செய்தியாளர் உயிருடன் தோன்றியதுடன், கொலைச் செய்தி ஒரு நாடகம் எனத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த அர்க்காடி பாப்செங்கோ செச்சன்யா போரின்போது ராணுவத்தில் பணியாற்றியவர். அதன்பின் ராணுவத்தில் இருந்து விலகிச் செய்தியாளராகப் பணிபுரிந்து வருகிறார். சிரியாவில் ரஷ்யாவின் செயல்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்யாவில் இருந்து வெளியேறி உக்ரைன் தலைநகர் கீவில் வாழ்ந்து வந்தார். செவ்வாயன்று அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியானது. ரஷ்யாவுக்கு எதிராக அவர் … Read more