மாற்றம் வேண்டுமென ஆற்றலுடன் முன் செல்லும் அன்புத் தம்பி..! சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்..!

மாற்றம் வேண்டுமென ஆற்றலுடன் முன் செல்லும் அன்புத் தம்பி செந்தமிழன் சீமான்  அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘தமிழர் நலனுக்காகத் தளராத தன்முனைப்புடன் உழைப்பவர், மாற்றம் வேண்டுமென ஆற்றலுடன் … Read more

குடியரசு தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி…!

குடியரசு தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அவரது தாழ்மையான ஆளுமை காரணமாக, அவர் முழு நாட்டையும் நேசித்தார். சமுதாயத்தின் ஏழை மற்றும் ஓரங்கட்டப்பட்ட பிரிவினரை மேம்படுத்துவதில் அவரது கவனம் முன்மாதிரியாக உள்ளது. அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை … Read more

நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – முதல்வர்

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் அவர் தனது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வந்தார். தற்போது கொரோனா தொற்று காரணமாக  தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூற யாரும் நேரில் வர வேண்டாம் என்றும், தனது பிறந்தநாளை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து கொண்டாடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில், கேப்டன் விஜயகாந்திற்கு திரையுலக பிரபலங்கள் … Read more

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுக்கு வாழ்த்து தெரிவித்த தினகரன்…! 

அரசியல் வாழ்வில்  தூய்மையும் எளிமையும் நேர்மையும் கொண்டு, பொது வாழ்வில் தனது வாழ்க்கையை அர்பணித்தவர்  நல்லக்கண்ணு  மற்றும் இவர்  பொது வாழ்வில்  உள்ளவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்பவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லக்கண்ணு அவர்களின் 93 பிறந்த நாளான இன்று, அவரை வணங்கி என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் தினகரன்… sources: dinasuvadu.com