நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – முதல்வர்

நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – முதல்வர்

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் அவர் தனது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வந்தார். தற்போது கொரோனா தொற்று காரணமாக  தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூற யாரும் நேரில் வர வேண்டாம் என்றும், தனது பிறந்தநாளை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து கொண்டாடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்திற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் விஜயகாந்த்  அவர்கள் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube