கவுதம் கார்த்திக்கை வைத்து கலாய்த்து அரங்கத்தை சிரிப்பலையில் அதிர வைத்த சதீஷ்..!

முதல்முறையாக கவுதம் கார்த்திக் – கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் படம் மிஸ்டர்.சந்திரமௌலி வருகிற ஜூலை 6-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கவுதம் ஜோடியாக ரெஜினாவும், முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி மற்றும் சதீஷ் நடித்துள்ளனர். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சதீஷ் பேசியதாவது, `கவுதம் கார்த்திக் இதுவரை நிறைய படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று திரு பேசும்பொது சொன்னார். ஆனால் முந்தைய படங்களில் எல்லாம் கவுதம் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். … Read more