இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் நாளை தொடக்கம்..!

ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்டில் விளையாட சமீபத்தில் ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்தது. அந்த அணி தனது அறிமுக டெஸ்டில் இந்தியாவுடன் விளையாட திட்டமிடப்பட்டது. அதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நாளை (14-ந்தேதி) தொடங்குகிறது. கேப்டன் விராட்கோலி இங்கிலாந்து தொடருக்காக இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். தவானும், முரளி விஜய்யும் தொடக்க வீரராக ஆடுவார்கள். ஐ.பி.எல். போட்டியில் முத்திரை பதித்த லோகேஷ் ராகுலுக்கு 11 … Read more