ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் தங்கம் கண்டுபிடிப்பு.!

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் பழங்காலத்தில் உபயோகப்படுத்திய  தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற பகுதிகளில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள், அரசர்கள் உபயோகித்த பொருட்கள், இடங்கள், தடையங்களை ஆய்வு செய்யும் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள் உபயோகித்த செப்பு கிரீடங்கள், அம்புகள் ஆகியவை தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது இந்த அகழ்வாய்வில் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அகழ்வாராய்ச்சி குழு அறிவித்துள்ளது.