பரபரப்பு.! தளபதி விஜய் படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு ஐடி ரெய்டு.!

  • ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு, வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இந்த ரெய்டு நடப்பதாக தகவல்.
  • ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ஏஜிஎஸ் நிறுவனம் தனி ஒருவன், அனேகன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிட்டுள்ளது. மேலும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக திரையரங்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்