டி20 உலகக்கோப்பை :ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய மகளிர் அணி .!

  • ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2020 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது.
  • இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2020 தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்  உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு உள்ளனர்.இன்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச முடிவு செய்தது.

முதலில் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷைபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இருவரும் இறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே ஸ்மிருதி மந்தனா 10 ரன்னில் வெளியேறினார். பின்னர் ஹர்மன்பிரீத் கவுர் இறங்கினர். சிறப்பாக விளையாடிய ஷைபாலி வர்மா 29 ரன்களுடன் வெளியேற பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 , ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

Image

இதையெடுத்து இறங்கிய தீப்தி சர்மா சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 49 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் ஜெஸ் ஜோனாசென் 2 விக்கெட்டை பறித்தார்.

133 ரன்கள் இலக்குடன்  ஆஸ்திரேலிய அணியின்  தொடக்க வீராங்கனைகளாக  அலிஸா ஹீலி ,பெத் மூனி இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அலிஸா ஹீலி அதிரடியாக விளையாடி வந்தார்.ஆனால் எதிர்முனையில் இருந்த பெத் மூனி 6 ரன்னில் வெளியேறினர்.

Image

பின்னர் இறங்கிய  கேப்டன் மெக் லானிங் (5) ,ரேச்சல் ஹெய்ன்ஸ் (6) ரன்னில் விக்கெட்டை இழந்தனர். அதிரடியாக விளையாடிய அலிஸா ஹீலி அரைசதம் அடித்து 51 ரன் எடுத்தார். பிறகு மத்தியில் இறங்கிய ஆஷ்லீ கார்ட்னர் மட்டும் 34 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியாக ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.இதனால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணி சார்பில் பூனம் யாதவ் 4 ,ஷிகா பாண்டே 3 விக்கெட்டை பறித்தனர்.

 

author avatar
Dinasuvadu desk