நடிகர்களை நம்பி விளையாடாதீர்கள்., அது ஆன்லைன் மோசடி.! டிஜிபி எச்சரிக்கை.!

நடிகர்கள் விளம்பரத்தில் வருகிறார்கள் என்பதற்காக ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டாம் என டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். 

ஆன்லைன் விளையாட்டு மோகம் தற்காலத்து இளைஞர்கள் மத்தியில் கொஞ்சம் அதிகமாகவே பரவி வருகிறது. குறைவான முதலீடு அதிகளவு லாபம் என கண்ணை பறிக்கும் விளம்பரங்கள் படித்த இளைஞர்களையும் கவர்ந்து விடுகின்றன.

அதனை நம்பி ஏமாந்து பலர் தங்கள் பெரும்பகுதி பணத்தை இழந்துள்ளனர். சிலர் இதனால் தற்கொலை செய்துகொண்டு தங்கள் உயிரையும் மாய்ந்துள்ள சம்பவங்களையும் நாம் அவ்வப்போது செய்திகள் மூலம் அறிந்திருக்கிறோம்.

அது குறித்த விழிப்புணர்வுகளை அவ்வப்போது அரசு மேற்கொண்டு தான் வருகிறது. அந்த வகையில் டிஜிபி சைலேந்திர பாபு அண்மையில் குறிப்பிடுகையில், ‘ சினிமா நடிகர்கள் விளம்பரத்தில் வருகிறார்கள் என்பதற்காக யாரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட வேண்டாம்.

அது ஆன்லைன் ரம்மி விளையாட்டு அல்ல. ஆன்லைன் ரம்மி மோசடி ‘ என ககுறிப்பிட்டு விழிப்புணர்வு தரும் வகையில் அறிவுறித்தியுள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment