இந்திய அரசின் கோவிஷீல்ட் தடுப்பூசி சான்றிதழை ஏற்றுக்கொண்ட சுவிட்சர்லாந்து!

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசி சான்றிதழை சுவிட்சர்லாந்து பயண பாஸ் அடிப்படையில் ஏற்றுகொண்டுள்ளது. 
இந்தியாவில் அனுமதி பெற்று போடப்பட்டு கொண்டிருக்கும் சிரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்கள் தடுப்பூசி சான்றிதழுக்கு ஐரோப்பிய நாடுகள் பல ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்லோவேனியா, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர்களின் சான்றிதழ்களை சுவிட்சர்லாந்து ஏற்க மறுத்திருந்தது.
மேலும், எஸ்டோனியாவிலும் இந்திய பயணிகளுக்கான கோவிஷீல்ட் தடுப்பூசி சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கோவிஷீல்ட்  தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிக்கும் பட்சத்தில் தடுப்பூசி போட்டவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிப்பதாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கூறியுள்ளது. இந்நிலையில் தற்போது சுவிட்சர்லாந்தும் கோவிஷீல்ட் தடுப்பூசி சான்றிதழ் கொண்ட இந்திய பயணிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
author avatar
Rebekal