Sweet : அடுப்பே இல்லாமல் அசத்தலான ஸ்வீட் இதோ..!

நமது வீடுகளில் குழந்தைகள் ஸ்வீட் கேட்டாலே கடைகளுக்கு சென்று தான் வாங்கி கொடுப்பதுண்டு. ஆனால், கடைக்கு செல்லாமல், அடுப்பே பயன்படுத்தாமல் குழந்தைகளுக்கு பிடித்த அட்டகாசமான ஸ்வீட்  செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • பொட்டுக்கடலை – 1கப்
  • கற்கண்டு –  100 கி
  • முந்திரி – 10
  • பாதாம் – 15
  • பாலாடை – அரை கப்
  • ஏலக்காய் தூள் – சிறிதளவு

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கற்கண்டை மிக்சியில் போட்டு தூளாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பௌலில் பாலாடையை போட்டு நன்கு மசித்து விட்டு, அதன் பின்பு கற்கண்டு, ஏலக்காய் தூள், முந்திரி, பாதாம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு பிசைந்து விட்டு, பட்டர் சீட் போட்ட ஒரு பவுலில் பிசைந்த கலவையை போட்டு நன்கு சமமாக தட்டி விட்டு அதன் மேல் முந்திரி மற்றும் பாதாம் பருப்பை தூவி விட்டு, உடனடியாக வெட்டி பரிமாறலாம்.

குழந்தைகளுக்கு கடைகளில் ஸ்வீட் வாங்கி கொடுப்பதைவிட இப்படி வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். இந்த ஸ்வீட் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக காணப்படுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.