வீடு வீடாக சர்வே செய்து பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சகம்

வீடு வீடாக சர்வே செய்து பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்தியாவில் 265,928 பேர் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,473 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இதன் தாக்கம் தணியவில்லை. இந்நிலையில், கொரோனா பாதிப்பை கண்டறிந்து கட்டுப்படுத்த, சென்னை உட்பட நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் வீட்டுக்கு வீடு சர்வே செய்து பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும்  என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.