80 அடியில் இருந்து 85 அடி ஆழத்திற்கு சென்ற சுர்ஜித்..! மற்றோரு குழி தோண்ட முடிவு..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் நேற்று மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.சுர்ஜித்தை மீட்கும் பணியில் தொடர்ந்து 24 நேரத்திற்கு மேலாக மீட்பு படையினர் மீட்க போராடி வருகின்றனர்.
அரசு பல முயற்சிகள் செய்தும் அனைத்தும் தோல்வியை தழுவி வருகின்ற நிலையில் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் 80 அடி ஆழத்தில் இருந்து 85 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டார். குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றில் 3 மீட்டர் தொலைவில் என்.எல்.சி , ஓஎன்ஜிசி மற்றும்  தீயணைப்பு வீரர்கள் ஒரு அடி அகலத்திற்கு  90 அடிக்கு மற்றோரு குழி தோண்டமுடிவு செய்து உள்ளனர்.
90அடி குழி  தோண்டிய பின் தீயணைப்பு வீரர்கள் 2 பேரை இறக்கி விட்டு குழந்தையை மீட்க முடிவு செய்து உள்ளனர். 90அடி குழி  தோண்டிய பின் பக்கவாட்டில் குழிதோண்டி குழந்தை மீட்பு  திட்டம் செய்து உள்ளனர். இந்த குழியை தோண்ட 4 மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.மேலும் இந்த குழியை என்.எல்.சி-யின் சுரங்கம் தோண்டும் கருவி மூலம் குழியை தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
நேற்று மாலை 05.40 மணிக்கு சுர்ஜித் 26 அடி ஆழத்தில் இருந்தார்.பின்னர் மீட்க மேற்கொண்ட முயற்சியினால் சுர்ஜித் 70 சென்று இருந்தார்.இதை தொடர்ந்து தற்போது 80 அடி ஆழத்தில் இருந்து 85 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டார்.

author avatar
murugan