உச்சநீதிமன்ற வளாகத்தில் புதியதோர் உதயமாக இரண்டு நீதிமன்றங்கள்!

ஹிமாச்சல் பிரதேச உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த தமிழ்நாட்டை சேர்ட்னா வி.ராமசுப்பிரமணியன் அவர்கள் உட்பட மேலும் நான்கு உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி வழங்கும் ஒப்புதலில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார்.

தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஆதலால் உச்சநீதிமன்ற வளாகத்தில், இரண்டு புதிய கிளை நீதிமன்றங்களை கட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சுற்றறிக்கையில், நீதிமன்ற வளாகம் 10க்கு அருகில் இரண்டு நீதிமன்றங்களை கட்டி அதற்க்கு நீதிமன்றம் 16,17 என பெயரிடப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.