தூக்கு தண்டனைக்கு எதிரான சீராய்வு மனு! வழக்கில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகல்!

  • நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தது. 
  • அந்த நால்வரில் அக்ஷ்ய குமார் என்பவர் தனக்கு கொடுக்கப்பட்ட தூக்கு தண்டனையினை குறைக்குமாறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். 

டெல்லியில் பரபரப்பை உண்டாக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா, அக்ஷய் குமார் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை உறுதி செய்தன.

இதில்  முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா தரப்பு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அக்ஷய் குமார் தரப்பு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தக்கல் செய்யப்பட்டது.

அந்த சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வரும் என கூறப்பட்டது. ஆனால், அந்த வழக்கில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகியுள்ளார். ஆதலால் இந்த வழக்கு விசாரணை நாள் வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நாளை விசாரிக்கப்படும் என கூறப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.