தாலிபான்களை ஆதரிப்பது பெண்களையும், புத்தரையும் அவமதிப்பதற்கு சமம் – முதல்வர் யோகி!

தாலிபான்களை ஆதரிப்பது பெண்களையும், புத்தரையும் அவமதிப்பதற்கு சமம் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள லக்னோவில் சமாஜிக் பிரதிநிதி சம்மேளம் எனும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தலிபான்கள் குறித்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பதாக ஆப்கானிஸ்தானின் பாமியான் நகரில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கௌதம புத்தரின் சிலையை தலிபான்கள் அழித்ததாகவும், இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு கடவுள் அவர்களை தண்டிக்கும் விதமாகத்தான் அமெரிக்கா தலிபான்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது எனவும் நாங்கள் கூறியிருந்தோம்.

இருப்பினும் இன்றும் நம் நாட்டில் பலர் தாலிபான்களுக்கு ஆதரவாக உள்ளனர். தலிபான்களை ஆதரிப்பது பெண்கள் மற்றும் புத்தரை அவமதிப்பது போன்றது. எனவே அத்தகையவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் புத்தர் ஒருபோதும் உலகின் மீது போரை திணிக்கவில்லை, அவர் மனித குலத்திற்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும், பக்தியின் மையமாகவும் தான் இருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal