மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவு, மக்களுக்கு ஏமாற்றம் – கமல்ஹாசன்

மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் மத்திய பட்ஜெட் இருக்கிறது என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ட்வீட்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே சீரழிந்த இந்தியப் பொருளாதாரத்தில் இடியென இறங்கியது பெருந்தொற்றுக் கால ஊரடங்கு. ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை.

மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இன்று டெல்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 20121-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு விதமாக பேசி வருகின்றனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள் அதனை விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பது குறிபிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்