முகம் புத்துணர்ச்சி பெற சூப்பர் டிப்ஸ்!

முகம் புத்துணர்ச்சி பெற சூப்பர் டிப்ஸ்.

இன்றைய இளம் தலைமுறையினர் முகத்தை அழகுபடுத்த பல வகையான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், நாம் முகத்திற்க்கு பல வகையான கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் முகத்தை எவ்வாறு புத்துணர்ச்சி பெற செய்வது என்பது பற்றி  பார்ப்போம்.

தேவையானவை

  • உலர்ந்த முந்திரி பழம்
  • காப்பி தூள்

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.   தேவையான  முந்திரி பழத்தை போட்டு, அதனுடன் சிறிது காப்பித்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

அதன் பின் நீரால் முகத்தை கழுவி, துணியால் துடைத்து மாய்சுரைசர் ஏதாவது பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் முகம் புத்துணர்ச்சி பெறும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.