மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! – கே.பாலகிருஷ்ணன்

மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

கடந்த 2018-ம் ஆண்டு நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த போராட்டத்தில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், வேதாந்த நிறுவனம்  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை என்று  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது வரவேற்பை தெரிவித்து வருகிற நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை தொடரும் என்கிற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு, மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.