சுலைமானி குறித்த உளவு: தூக்கு தண்டனை நிறைவேற்றம்

ஈரான் தளபதி சுலைமானி குறித்து அமெரிக்கா ,இஸ்ரேல் ,உள்ளிட்ட நாடுகளுக்கு உளவுபார்த்ததாக  தூக்கு தண்டனையை  ஒருவருக்கு ஈரான் அரசு நிறைவேற்றி உள்ளது.

ஈரான் நாட்டின் ராணுவ தலைமை தளபதி சுலைமானி கடந்த ஜனவரி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக அந்நாடு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.இந்நிலையில் சுலைமானி குறித்த தகவலை எல்லாம் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாக மஹ்மூத் மவ்சாவி மஜித் என்பவரை ஈரான் கடந்த மாத இறுதியில் அதிரடியாக கைது செய்து இருந்தது.

சிஐஏ மற்றும் மொசாட் என்ற உளவு அமைப்புகளில் பணியாற்றியவர் இவர்  மேலும் சுலைமானியின் வாகனப் பயணம் குறித்த தகவலை அமெரிக்க தந்ததாக இவர் மீது குற்றம் சாட்டு எழுந்தது.

இது தொடர்பான விசாரணையில் அவருக்கு மரணதண்டனை  விதிக்கப்பட்டு நேற்று நிறைவேற்றப்பட்டது.

author avatar
kavitha