மத்திய அரசின் போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் – அமைச்சர் உதயநிதி

கல்வியை வழங்கி சமூகத்தில் உயர்நிலையை அடையச் செய்வது தான் திராவிட மாடலின் இலக்கு என உதயநிதி பேச்சு.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில கல்லூரியில் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் போட்டித் தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்ப்பை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், மத்திய அரசின் போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும். தனியார் பயிற்சி மையங்கள் புற்றீசல் போல தோன்றி லட்சக்கணக்கான பணத்தை வசூலிக்கின்றன; பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்காக இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடக்கபட்டுள்ளது. கல்வியை வழங்கி சமூகத்தில் உயர்நிலையை அடையச் செய்வது தான் திராவிட மாடலின் இலக்கு என  தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment