மயக்க மருந்து கொடுக்காமல் பெண்களுக்கு துடிக்க துடிக்க கருத்தடை அறுவை சிகிச்சை…!

பீகாரில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வந்த பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல், துடிக்க துடிக்க அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள். 

பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் உள்ள அரசு மருத்துவ நிலையங்களில், கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல், வலியில் துடிக்க துடிக்க அறுவை சிகிச்சை செய்ததாக அப்பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்கள் கூறுகையில், சிகிச்சையின்போது வலி தாங்க முடியாமல் சிலர் அலறித் துடித்ததாகவும் அப்போது 4 பேர் சேர்ந்து அவர்கள் கை மற்றும் கால்களை பிடித்து கொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், சகரியா மாவட்ட அறுவை சிகிச்சை மருத்துவ அதிகாரி அமர்கண்ட ஜா, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், இச்சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment