தடுப்பூசி வீணடிப்பதில் முதல் மூன்று இடத்தில் உள்ள மாநிலங்கள்…! – மத்திய சுகாதார அமைச்சகம்

ஜார்கண்ட், சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தடுப்பூசியை வீணடிப்பதில் முதல் மூன்று இடத்தில் உள்ளது. 

இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரையில், ஒரு கொரோனா தடுப்பூசி குப்பியை எடுத்துக் கொண்டால், அதனை பயன்படுத்தி 10 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும்.  ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் 10 பேருக்கும் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால், மீதமுள்ள மருந்துகள் அனைத்தும் பயனில்லாமல் போய்விடும். அந்த வகையில் அதிக அளவில் தடுப்பூசி சில மாநிலங்களில் வீணடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தடுப்பூசிகள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக தான் வீணடிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பல மாநிலங்கள் அதிகளவு தடுப்பூசி வீணாக்குகின்றனர். நாடு முழுவதும் 6.3% தடுப்பூசிகளின் வீணடிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 37.3% தடுப்பூசிகளும் வீணடிக்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. சத்தீஸ்கரில் 30.2% தடுப்பூசி வீணடிக்கப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகம் 15.5% தடுப்பூசிகளை வீணடித்து மூன்றாவது இடத்தில் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் 10.8 சதவீதம் ,  மத்திய பிரதேசம் 10.7% தடுப்பூசிகளை வீணடித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.