புதிய கல்வி கொள்கை கருத்து தெரிவிக்க மாநில முதல்வர்களுக்கு அழைப்பு!

புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மத்திய மனித மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய கல்வி கொள்கை வரைவு  மீதான கருத்து தெரிவிக்க கடந்த ஜூன் மாதம் 1 ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டு இருந்தது. தேதியை நீட்டிக்கோரி பலரும் கூறி இருந்த நிலையில், ஜூலை மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் 15 நாட்கள் நெடிது இன்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே போல், வரும் ஆகஸ்ட் 8 ம் தேதி மாநில முதல்வர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வந்துள்ளது. இந்த கூட்டத்தில் மாநிலங்களில் புதிய கல்வி கொள்கை மீதான கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.