உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு கேட்டு நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் கடிதம்..!

உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு கேட்டு நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர்காக்கும் மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொழுது சுங்கவரி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., மற்றும் இதர வரிகள் மீது விலக்கு அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கு மரபணு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த நோய் பாதித்த ஒருவருக்கு செலுத்தும் மருந்து ரூ.16 கோடியாக இருக்கிறது.

இதுபோன்ற மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொழுது சுங்க வரி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., மற்றும் இதர வரிகள் விதிக்கப்படுகிறது. அதனால் இந்த வரிகள் மீது விலக்கு அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் இந்த மருந்தை இறக்குமதி செய்யும்பொழுது வரிகளை மத்திய அரசு விலக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை மித்ராவுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளுக்கு வரி விலக்கு அளிக்கவும், இது போன்ற மருந்துகளுக்கு வரிகளை நீக்குவதற்கு கொள்கை முடிவு எடுக்க வலியுறுத்தியும் நிதியமைச்சருக்கு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Recent Posts

தினமும் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…

21 mins ago

உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார்! யுவராஜ் சிங் பேச்சு!

Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…

34 mins ago

பிரதமர் பதற்றத்தில் இருப்பது பேச்சிலேயே தெரிகிறது… ராகுல் காந்தி விமர்சனம்!

Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்…

51 mins ago

மீண்டும் அதே பிரச்சாரம்… கார்கே கோரிக்கையை ஏற்க மறுக்கும் பிரதமர் மோடி.?

Election2024 : பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மீண்டும் காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி பற்றி விமர்சனம் செய்துள்ளார். . 7 கட்டங்களாக நடைபெற்று வரும்…

1 hour ago

தளபதி 69 நான் எடுத்தா இவுங்க எல்லாரும் இருப்பாங்க! நெல்சன் போட்ட மாஸ்டர் பிளான்?

Thalapathy 69 : விஜயின் 69 -வது படத்தை தான் இயக்கினால் இந்த பிரபலங்களை அவருடன் நடிக்க வைப்பேன் என இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார். நடிகர் விஜய்யின்…

2 hours ago

இறுதிக்கட்டத்தில் 2ம் கட்டம்… டாப்பில் திரிபுரா… மற்ற மாநிலங்களில் நிலவரம் என்ன?

Election2024: இன்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில்…

2 hours ago