வெற்றிவேல் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்..!

அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், வெற்றிவேல் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். வெற்றிவெல் தொகுதி மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமாக பேசக்கூடியவர், இவரின் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

author avatar
murugan