#BREAKING: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஸ்டாலின் தலைமயில் பேரணி தொடங்கியது.!

  • குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்  என வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில்  இன்று பேரணி நடைபெற்று வருகிறது.
  • இந்த பேரணி சென்னையில் உள்ள  எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளனர்.

குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்  என வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணியாக  சென்னையில் உள்ள  எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளனர்.

பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உள்ளனர்.இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பேரணியை கண்காணிக்க 4 ட்ரோன் கேமரா மற்றும் 110 கேமராக்களை போலீசார் பயன்படுத்தி உள்ளார்.

எதிர்பாராத அசம்பாவிதம், வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் பேரணி செல்லும் பாதைகளில் உள்ள கடைகள், நிறுவனங்களை அடைக்க போலீசார் வலியுறுத்தியுள்ளனர். அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை இருந்து  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி தொடங்கியது. இந்த பேரணியில் ப.சிதம்பரம், வைகோ, திருமாவளவன், தயாநிதி மாறன், கனிமொழி, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன், கி.வீரமணி, மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று உள்ளனர்.

 

author avatar
murugan