இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வருகை..!

இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய

By murugan | Published: Nov 20, 2019 07:00 AM

இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நேற்று முன்தினம் இலங்கை அதிபராக கோத்தபாய ராஜபக்சே பதவியேற்றார். இவருக்கு பிரதமர் மோடி உட்பட பல நாட்டு தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறினர். இந்நிலையில் நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே நேரில் சந்தித்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ராஜபக்சே வருகின்ற 29 ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.  சந்திப்பில் இரு நாட்டு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது என கூறினார்.
Step2: Place in ads Display sections

unicc