இன்றைய போட்டியில் இலங்கை Vs ஆப்கானிஸ்தான் மோதுகிறது!

உலகக்கோப்பை தொடர் போட்டிகள்  நடைபெற்று வருகிறது.நேற்று நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி மோதியது.இப்போட்டியில்  இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது.முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் குவித்தது.
பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் எடுத்து. 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை Vs ஆப்கானிஸ்தான் அணி மோத உள்ளது.இப்போட்டி  கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியானது இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு  நடைபெற உள்ளது.
 

author avatar
murugan