மைதானத்தில் மழைநீரை வெளியேற்ற பஞ்சு, அயர்ன் பாக்ஸ்.? BCCI-ஐ கலாய்த்து வரும் நெட்டிசன்கள்.!

மைதானத்தை மழைநீரை வெளியேற்ற பஞ்சு போன்றவற்றை பயன்படுத்திய பிசிசிஐயை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சென்னை மற்றும் குஜராத் அணிகள் விளையாடும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்து ஐபிஎல் இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை படைத்தது.

gujrat Final
gujrat Final Image Source IPLT20

இதன்பின், 215 ரன்கள் வென்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கேப்டன் தோனி தலைமையிலான சென்னை அணி 3 மூன்று பந்துகளில் 4 ரன்களை அடிக்க, மழை பெய்து ஆட்டத்தை தாமதப்படுத்தியது. மழை நின்ற பிறகு மைதானத்தில் அதிக தண்ணீர் ஆக இருந்ததால் ஆட்டம் தொடங்குவதற்கு மீண்டும் தாமதமானது.

DLS targets
DLS targets Image Source TwitterRanjan zeh

ஒருவழியாக போட்டி தொடங்கிய நிலையில் சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் டிஎல்எஸ் (DLS) முறைப்படி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இருந்தும் சென்னை அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இறுதியில் ஜடேஜா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் ஐபிஎல்லில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வென்றது.

chennai champion
chennai champion Image Source TwitterIPL

இதற்கிடையில் மழைபெய்து வந்த மைதானத்தின் ஈரத்தை உலர்த்துவதற்கு களப்பணியாளர்கள் கடுமையாக போராடி வந்தனர். அவர்கள் மைதானத்தை சரி செய்வதற்கு பஞ்சு மற்றும் அயன்பாக்ஸ் போன்றவற்றை பயன்படுத்தி உலர்த்திவந்தனர். இது தற்பொழுது ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதில் ஒருவர், ஐபிஎல் 2023 லீக்கிற்கான பட்ஜெட் ரூ.87 கோடி, இந்த மைதானத்தை உலர்த்த 80 ரூபாய் ஹேர் ட்ரையர் என்றும், மற்றொருவர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை பிசிசிஐயுடன் ஒப்பிட்டு இசிபி-ஐ விட பிசிசிஐ 728% பணக்காரர் என்பதை நினைவில் கொள்ளவும் என்றும் பதிவிட்டுள்ளனர். மேலும், ஒருவர் அவுட்ஃபீல்ட் ஈரமாக உள்ளது, ஹேர் ட்ரையரைப் பயன்படுத்த வேண்டிய நேரம் இது என்று கேலி செய்துள்ளார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.