தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு ரயில்கள் ரத்து.! ரயில்வே அதிரடி.!

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 சிறப்பு ரயில்களை ஜூன் 1-ம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அனுமதி வழங்கியது. இதன்படி, கோவை -காட்பாடி,  மதுரை -விழுப்புரம்,  திருச்சி -நாகர்கோவில், கோவை -மயிலாடுதுறை ஆகிய வழித்தடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

தமிழக்தில் கொரோனா வேகமாக பரவுவதால் தமிழக அரசு சிறப்பு ரயில்கள் இயக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என தெற்கு ரயில்வேக்கு வேண்டுகோள் விடுத்தது. இதனையடுத்து சிறப்பு ரயில்கள் இன்று முதல் ஜூலை 15 ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயிலில் முன்பதிவு செய்தவர்களுக்கு 6 மாதத்திற்குள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan