தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை

அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவில்களாக விளங்குவது தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். சமயபுர மாரியம்மன்  எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக்கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி இருக்கிறார். இக்கோயிலின் தல மரம் வேப்ப மரமாகும்.

அம்மனை வழிபட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலத்தவரும், பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகஅளவில் வருகை தருகின்றனர்.இது தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

பூஜைகள்:

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சித்திரைத் தேர்த்திருவிழா, ஆடி வெள்ளி, பூச்சொரிதல் விழா போன்ற விழாக்காலங்களிலும் நடை பெறுகிறது. ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். குறிப்பாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பங்குனி திருவிழா :

ஒவ்வொரு வருடமும் பங்குனி திருவிழா தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோவிலும் மிகவும் சிறப்பாக கொண்டாட பட்டு வருகிறது.இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக பங்குனி திருவிழா கடந்த 19 ந் தேதி ஆரம்பிக்கபட்டது.அந்த திருவிழா காப்புக்கட்டுதலுடன் ஆரம்பமானது.

இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாலும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடத்தப்பட்டது. தினந்தோறும் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதிஉலா  வந்து பக்தர்களுக்கு அருள்பலித்தார்.இந்நிலையில் நிறைவு நாளான நேற்று பக்தர்கள் பால்குடம் ,பறவைக்காவடி,வேல்காவடி ஆகியவற்றை எடுத் வழிபட்டார்கள்.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றார்கள்.

 

Leave a Comment